குதிரை லாடம் கிடைத்தால், இதை கொடுத்த அல்லாஹ் குதிரையை கொடுப்பான் என்று நம்புகிறவர் தான் மூமின்.
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
Dec 22, 2009
வணக்கம் என்றால் என்ன?
தன் இஷ்டத்திற்கு வாழ்வதை குழி தோண்டி புதைத்து விட்டு அல்லாஹ்வின் இஷ்டத்திற்கு ஐக்கியப்பட்டு வாழ்வதற்கு பெயர் தான் வணக்கம்.
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
'அல்லாஹு அல்லாஹ்' திக்ர்
யார் 'அல்லாஹு அல்லாஹ்' என்று சதாவும் அல்லாஹ்வை அழைக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் ராஜ வாழ்க்கை வாழ வைப்பான். அவரை எங்கும் எப்பொழுதும் கேவலப்படுத்த மாட்டான்.
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
Dec 16, 2009
வலிமார்களில் சிறந்தவர்கள்
வலிமார்களில் சிறந்தவர்கள் அதிகம் குர்ஆன் ஓதுபவர்கள், அதிகமாக பிரார்த்தனை செய்பவர்கள்.
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரக)
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரக)
Dec 15, 2009
இரண்டு துர்க்குணங்கள்
சூஃபியாக்கள் சொல்கிறார்கள்: மனிதனிடத்தில் இரண்டு துர்க்குணங்கள் முளைத்து விட்டால் அதற்கு பிறகு அவனில் இக்லாஸ் என்ற தூய உள்ளம் இருக்காது. ஒன்று தனது தீனுடைய செயல்பாடுகளுக்காக மக்களிடையே நன் மதிப்பை தேடுவது. இரண்டாவது, தான் செய்யக்கூடிய சன்மார்க்க நல காரியங்களுக்கு பகரமாக இந்த துனியாவுடைய பலனை எதிர்பார்ப்பது.
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
இறை பாதையில் மிக உயர்வான படித்தரம்
இறை பாதையில் மிக உயர்வான படித்தரம் எந்த வினாடியும் தான் அல்லாஹ்விடம் முஹ்தாஜ் (தேவை உள்ளவன்) என்பதை மறக்காமல் இருத்தல்.
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
ஈருலக வெற்றிக்கு வழி
ஈருலக வெற்றி அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூரிவதில் தான் இருக்கிறது. நம்முடைய எந்த காரியமும் வெற்றியாக வேண்டுமானாலும் அதற்கு ஒரே வழி அல்லாஹு தஆலாவை தியானிப்பது தான். அல்லாஹ்வை கல்பிலும் சிந்தனையிலும் தரிப்படுத்தி கொள்ளுங்கள். அவன் தான் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அருளாளன்.
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
அல்லாஹ்வால் ஞானம் கொடுக்கப்பட்டவர்
அல்லாஹ் யாருக்கு தன்னை பற்றிய ஞானத்தை கொடுக்கின்றானோ அவர்களை வறுமையில் வைக்க மாட்டான்.
- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
அரசனாக வாழ விரும்பினால்
சிருஷ்டிகளுக்கு மத்தியில் அரசனாக வாழ விரும்பினால், தொழுகையுடைய நேரம் வந்தால் உனது நெற்றியை சஜ்தாவில் வைத்து விடு.
- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
குறிப்பு: அல்லாஹ்வை குறித்த நேரங்களில் வணங்குவதால் பூமியில் அரசர்களை போல் வாழலாம். அல்லாஹ்விற்கு தலை வணங்கியவர்களை அவன் மற்ற சிருஷ்டிகளுக்கு தலை வணங்கும் நிலை ஏற்படுத்த மாட்டான் என்பது கருத்து.
- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
குறிப்பு: அல்லாஹ்வை குறித்த நேரங்களில் வணங்குவதால் பூமியில் அரசர்களை போல் வாழலாம். அல்லாஹ்விற்கு தலை வணங்கியவர்களை அவன் மற்ற சிருஷ்டிகளுக்கு தலை வணங்கும் நிலை ஏற்படுத்த மாட்டான் என்பது கருத்து.
'நான்' என்ற வாடை
தரீக்கத்திற்குள் வந்த பிறகும் உங்களிடையே 'நான்' என்ற வாடை வீசுமானால், நீங்கள் அல்லாஹ்வுடைய அருளை அடைய முடியாது. நான் என்ற அகம்பாவம் வரும் போது அல்லாஹ் உன்னை ஷைத்தானிடம் ஒப்படைத்து விடுகிறான்.
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
வாழ்க்கையின் நோக்கம்
அல்லாஹ்வை தேடுங்கள்;
அல்லாஹ்வை அடையுங்கள்;
அல்லாஹ்வை நேசியுங்கள்;
அல்லாஹ்வுடன் வாழுங்கள்;
அல்லாஹ்வுக்கு அர்ப்பனமாகுங்கள்.
- - ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
அல்லாஹ்வை அடையுங்கள்;
அல்லாஹ்வை நேசியுங்கள்;
அல்லாஹ்வுடன் வாழுங்கள்;
அல்லாஹ்வுக்கு அர்ப்பனமாகுங்கள்.
- - ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
Dec 5, 2009
பொறுமை, வீரம், பணிவு பெற வழி
"நபிமார்களின் சரித்திரங்களை படியுங்கள் - பொறுமை வரும்
சஹாபாக்களின் சரித்திரங்களை படியுங்கள் - வீரம் வரும்
வலிமார்களின் சரித்திரங்களை படியுங்கள் - பணிவு வரும்."
- ஷெய்கு ஃபைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
சஹாபாக்களின் சரித்திரங்களை படியுங்கள் - வீரம் வரும்
வலிமார்களின் சரித்திரங்களை படியுங்கள் - பணிவு வரும்."
- ஷெய்கு ஃபைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
ஒருமை இருமை
"சிருஷ்டிகள் ஒரு போதும் அல்லாஹ் ஆக முடியாது. அல்லாஹ் ஒரு போதும் சிருஷ்டியாக முடியாது. ஆனால் அல்லாஹ் இல்லாமல் இந்த சிருஷ்டிகள் இருக்க முடியாது. " - ஷெய்கு ஃபைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
Subscribe to:
Posts (Atom)