குதிரை லாடம் கிடைத்தால், இதை கொடுத்த அல்லாஹ் குதிரையை கொடுப்பான் என்று நம்புகிறவர் தான் மூமின்.
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
Dec 22, 2009
வணக்கம் என்றால் என்ன?
தன் இஷ்டத்திற்கு வாழ்வதை குழி தோண்டி புதைத்து விட்டு அல்லாஹ்வின் இஷ்டத்திற்கு ஐக்கியப்பட்டு வாழ்வதற்கு பெயர் தான் வணக்கம்.
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
'அல்லாஹு அல்லாஹ்' திக்ர்
யார் 'அல்லாஹு அல்லாஹ்' என்று சதாவும் அல்லாஹ்வை அழைக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் ராஜ வாழ்க்கை வாழ வைப்பான். அவரை எங்கும் எப்பொழுதும் கேவலப்படுத்த மாட்டான்.
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
Dec 16, 2009
வலிமார்களில் சிறந்தவர்கள்
வலிமார்களில் சிறந்தவர்கள் அதிகம் குர்ஆன் ஓதுபவர்கள், அதிகமாக பிரார்த்தனை செய்பவர்கள்.
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரக)
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரக)
Dec 15, 2009
இரண்டு துர்க்குணங்கள்
சூஃபியாக்கள் சொல்கிறார்கள்: மனிதனிடத்தில் இரண்டு துர்க்குணங்கள் முளைத்து விட்டால் அதற்கு பிறகு அவனில் இக்லாஸ் என்ற தூய உள்ளம் இருக்காது. ஒன்று தனது தீனுடைய செயல்பாடுகளுக்காக மக்களிடையே நன் மதிப்பை தேடுவது. இரண்டாவது, தான் செய்யக்கூடிய சன்மார்க்க நல காரியங்களுக்கு பகரமாக இந்த துனியாவுடைய பலனை எதிர்பார்ப்பது.
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
இறை பாதையில் மிக உயர்வான படித்தரம்
இறை பாதையில் மிக உயர்வான படித்தரம் எந்த வினாடியும் தான் அல்லாஹ்விடம் முஹ்தாஜ் (தேவை உள்ளவன்) என்பதை மறக்காமல் இருத்தல்.
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
ஈருலக வெற்றிக்கு வழி
ஈருலக வெற்றி அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூரிவதில் தான் இருக்கிறது. நம்முடைய எந்த காரியமும் வெற்றியாக வேண்டுமானாலும் அதற்கு ஒரே வழி அல்லாஹு தஆலாவை தியானிப்பது தான். அல்லாஹ்வை கல்பிலும் சிந்தனையிலும் தரிப்படுத்தி கொள்ளுங்கள். அவன் தான் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அருளாளன்.
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)
Subscribe to:
Posts (Atom)